News November 23, 2024
ஜார்கண்டின் ‘ஷிண்டே’சம்பாய் சோரன் வெற்றி!

ஜார்கண்ட் தேர்தலில் செரைகெல்லா தொகுதியில் பாஜகவில் போட்டியிட்ட சம்பாய் சோரன் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் JMM கட்சி வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். இந்த தொகுதியில் சம்பாய் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்த சம்பாய் சோரன் மூலம் பழங்குடிகளின் வாக்குகளை கவர பாஜக திட்டமிட்டது. ஆனால் அதனை முறியடித்து அங்கு JMM ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
Similar News
News August 17, 2025
அண்ணாமலைக்கான வாக்குகளும் நீக்கம்: அ.சம்பத்

EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.
News August 17, 2025
2047-க்குள் ஒற்றை அடுக்க ஜிஎஸ்டி?

ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 17, 2025
என்னுடைய முதல் எதிரி சாதி: கமல்ஹாசன்

தன்னுடைய சாதியை சொல்லி பலர் கிண்டல் செய்திருப்பதாகவும், ஆகையால் தன்னுடைய முதல் எதிரி சாதி தான் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தும் தலைவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அவர்கள் களத்தில் இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிறப்பால் நாம் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்றார்.