News May 27, 2024

முப்பாத்தம்மன் கோயிலில் ஜான்வி கபூர் சாமி தரிசனம்

image

சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக சாமி தரிசனம் செய்தார். தமிழ் பெண்ணாக பாவாடை தாவணி உடை அணிந்து கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்த கோயில் மறைந்த தனது தாயார் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான இடம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரது பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

Similar News

News April 7, 2026

கூலி தொழிலாளி கொலையில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

image

சாத்தூர் அருகே என்.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இக் கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு இரவு பைக்கில் சென்ற சதீஷ்குமாரை, அதே பகுதியை கண்ணன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News April 7, 2026

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா?

image

நமது உடலில் நமக்கு தெரியாமலே ஏற்படும் குறைபாடுகளுள் ஒன்று ஹைப்போ தைராய்டிசம். அதாவது, நமது கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாமல் போவது. இதனை கண்டறிவது மிகவும் சிரமம். ஆனாலும், உடல் பருமன், சோர்வு, ஆற்றல் குறைவு ஆகிய அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்னையை கண்டறியலாம். உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளவும்.

News April 7, 2026

டூப் விஜய்யுடன் தேர்தல் பிரசாரம்

image

தேர்தல் பரப்புரையில் பாதுகாப்பு காரணங்கள், அனுமதி மறுப்பு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி விஜய் இன்னும் பல தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு செல்லாமல் உள்ளார். இந்நிலையில், திருவெறும்பூர் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். விஜய் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட பொம்மையை பிரசார வாகனத்தில் நிற்க வைத்து, தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!