News September 13, 2024
மீனவர்களுக்காக கொந்தளித்த ஜெயக்குமார்!

நாகை மீனவர்களின் படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இன்று கரை வந்து சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், “மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News January 7, 2026
தஞ்சை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 7, 2026
என் நண்பர் நெதன்யாகு: PM மோடி

இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன், PM மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது நண்பர் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது பற்றி பேசியதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்த்து போராடுவதை இருநாடுகளும் உறுதிப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் ஜன.9-ல் தீர்ப்பு வழங்கப்படும் என மெட்ராஸ் HC தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, தணிக்கை வாரியம் விதிகளை காற்றில் பறக்கவிட்டதாக படக்குழு குற்றஞ்சாட்டியது. கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், உடனடியாக சான்றிதழ் வழங்குவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


