News October 13, 2025
நகை கடன்.. முக்கிய தகவல்

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
Similar News
News October 14, 2025
1,968 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் முடிவு

இன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர். காஸா அமைதி ஒப்பந்தப்படி, சிறைகளில் நீண்டகால அடைக்கப்பட்டுள்ள 1,968 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் ஏற்பாடுகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறைகளில் இருந்தோரை ஒப்படைப்பு மையங்களுக்கு அனுப்பும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், செயல்முறைகள் நிறைவடைந்த பின் காஸாவுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
News October 14, 2025
டிரம்ப், நெதன்யாகுவை வாழ்த்திய PM மோடி

இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து PM மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது, அவர்களின் குடும்பத்தினரின் துணிவை காட்டுகிறது. அதிபர் டிரம்ப்பின் இணையற்ற அமைதி முயற்சிகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான முடிவும் தான் இதை சாத்தியமாக்கி உள்ளதாக பாராட்டிய மோடி, அமைதியை கொண்டு வந்ததற்காக டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
125 தொகுதிகளை கேட்கிறதா காங்கிரஸ்?

தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து நாம் பணியாற்ற வேண்டும் என காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவிடம் காங்கிரஸ் 125 தொகுதிகளை கேட்க நினைக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால் அனைவரின் தொகுதிகளையும் சேர்த்துதான் அப்படி சொல்லப்பட்டதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து தலைமையே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.