News October 4, 2025

நகைக் கடன்… வந்தது முக்கிய அறிவிப்பு

image

நகைக் கடன் விதிகளில் மாற்றம் செய்து RBI அறிவித்துள்ளது. 2026 ஏப்.1 முதல் நகைக் கடன் வரம்பு 3 அடுக்குகளாக பிரிக்கப்படும். ₹2.5 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு நகை மதிப்பில் 85% கடன் வழங்கப்படும். ₹2.5- ₹5 லட்சத்திற்குள் கடன் வேண்டுமெனில் 80%, அதற்குமேல் வேண்டுமெனில் 75% அளவுக்குமே கடன் கிடைக்கும். மேலும், நகைக் கடனை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. SHARE

Similar News

News March 17, 2026

8 MP-க்களின் இடைநீக்கம் ரத்தாகிறது

image

லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 MP-க்கள் ஏப்ரல் 2-ம் தேதி வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இடைநீக்கத்தை ரத்து செய்ய சபாநாயகர் நேற்று முடிவெடுத்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 17, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 17, பங்குனி 3 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 17, 2026

தொகுதி பங்கீடு பிரச்னை…. CPM எழுப்பும் கேள்வி

image

காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கும் போது CPM-க்கு வழங்குவதில் என்ன சிக்கல் என சண்முகம் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் 60 தொகுதிகள் கூட வாங்கிக் கொள்ளட்டும்; அதைப் பற்றி தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால், காங்., கூடுதலாக கொடுக்க வாய்ப்பிருக்கும் போது ஏன் இடதுசாரிகளுக்கு குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!