News October 25, 2025
நகைக் கடன்.. HAPPY NEWS

தங்க நகைக் கடனை அதிகரிக்க ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு RBI பச்சைக்கொடி காட்டியுள்ளது. தனிநபர், வீடு, வாகனம் போன்ற வங்கிக் கடன்களின் வளர்ச்சி சமநிலையில் உள்ளது. இதனால், குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்க வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தங்க நகைக் கடன் பாதுகாப்பானது என்பதால், கிராமப் புறங்களில் இந்த வசதிகள் இல்லாத கிளைகளிலும் இனி நகைக் கடன்களை வழங்க ஸ்மால் பைனான்ஸ்கள் தீவிரம் காட்டுகின்றன.
Similar News
News October 25, 2025
இந்தியா Vs பாக்.: எல்லையில் இரு ராணுவங்களும் பயிற்சி

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News October 25, 2025
தொடரை இழந்தாலும் இந்தியா தான் நம்பர் 1: மிட்செல் மார்ஷ்

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


