News October 3, 2025
நகை கடன்.. மக்களுக்கு குட் நியூஸ்

கிராமப்புற மக்களுக்கு ஈசியாக நகை கடன் வழங்குவதற்காக பொதுத் துறை வங்கியான பரோடா, IIFL நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, விவசாயம் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டியில் விரைவாக நகை கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பரோடா வங்கி வழங்கும். தொழில்நுட்ப சேவைகளை IIFL அளிக்கும். அருகிலுள்ள வங்கி கிளைக்குச் சென்று விவரங்களை அறியலாம். SHARE IT.
Similar News
News October 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 4, 2025
போரை நிறுத்தலன்னா… ஹமாஸை எச்சரித்த டிரம்ப்

இஸ்ரேலுடன் போரை நிறுத்த ஹமாஸுக்கு அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வரும் ஞாயிறுக்குள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், ஹமாஸ் நரகத்துக்கு தான் போக வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்குக்கு பல்லாண்டுகளாக அச்சுறுத்தலாக உள்ள ஹமாஸ், கடந்த அக்.07, 2023-ல் இஸ்ரேலில் மிகப்பெரிய இனவழிப்பை செய்தது என்ற அவர், இதற்கு பதிலடியாக இதுவரை 25,000+ ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
News October 4, 2025
கிட்னியை விற்று ஐபோன் வாங்கியதால் வந்த வினை

ஐபோன் மீதான மோகத்தால் சீனாவில் வாலிபர் ஒருவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார். வாங் சாங்குன் என்பவர் 2011-ல் ஐபோன் 4 மற்றும் ஐபேட் 2 வாங்குவதற்காக தனது வலது கிட்னியை 20,000 Yuan (₹2.5 லட்சம்) விற்றுள்ளார். சில மாதங்களில் அவரது மற்றொரு கிட்னியும் பாதிப்படைந்த நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக டயாலிசிஸ் மிஷின் உதவியோடு உயிர் வாழ்ந்து வருகிறார்.