News May 4, 2024
தொடர்ந்து குறையும் ஆபரணத் தங்கம் விலை

கடந்த வாரம் ₹55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ₹53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹52,800க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது.
Similar News
News February 13, 2026
பாமகவில் இருந்து உருவான கட்சிகளின் லிஸ்ட்

ராமதாஸ் தரப்பு ‘அய்யா பாமக’ என்ற கட்சியை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாமகவில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவது இது முதல்முறை அல்ல. மக்கள் நல உரிமைக் கழகம் (பண்டிருட்டி ராமசந்திரன்), தமிழ் பாமக (தீரன்), தமமுக (ஜான் பாண்டியன்), தமிழர் அரசு ( பசுபதி பாண்டியன்), தமிழக வாழ்வுரிமை (வேல்முருகன்), மக்கள் விடுதலை கழகம் (முருகவேல்ராஜன்) உள்ளிட்ட பல கட்சிகள் உருவெடுத்து இருக்கிறது.
News February 13, 2026
EPS-ஐ ‘வாஷிங் மெஷினில்’ போட்டு வைத்துள்ள பாஜக

சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற T.K.S.இளங்கோவன், அதிமுகவையும், இபிஎஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு EPS துணை போவதாகவும், பாஜக தனது ‘வாஷிங் மெஷினில்’ இபிஎஸ்ஸை போட்டு வைத்துள்ளதாகவும் சாடினார். மேலும் எவ்வளவு பெரிய திருடனும் பாஜகவுடன் சேர்ந்தால் ‘நல்லவன்’ ஆகிவிடலாம் என்பதற்கு அதிமுகவே சாட்சி எனத் தெரிவித்தார்.
News February 13, 2026
கண்ணதாசனின் பொன்மொழிகள்

▶ஆறு கிழக்கு நோக்கித்தான் போகும் என்றால் மேற்கே நோக்கி போகிறவன் எதிர்நீச்சல் போட்டு தான் ஆக வேண்டும். ▶ பலமும் பலவீனமும் விலை நியாயத்தை பொறுத்ததே தவிர அசட்டுத் துணிச்சலும் இல்லை அஞ்சி நடுங்குவதிலும் இல்லை. ▶எல்லாம் பொய்யே என்று சொல்வதன் மூலம் உன்னை தானே ஏமாற்றிக் கொள்ள முடியும் உலகத்தை அல்ல. ▶நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான்.


