News August 9, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை ₹600 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை 2ஆவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து ₹51,400க்கும், கிராமுக்கு ₹75 அதிகரித்து ₹6,425க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ₹88க்கும், கிலோவிற்கு ₹1,500 உயர்ந்து ₹88,000க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக விலை குறைந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Similar News
News September 18, 2025
Beauty Tips: உங்கள் முகத்தில் செய்யவே கூடாத 3 தவறுகள்

உங்கள் முகத்துக்கு ஏற்றார் போல நல்ல Facewash-ஐ வாங்கி பயன்படுத்தினாலும், அதனால் நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லையா? இந்த 3 தவறுகளை பண்றீங்களான்னு செக் பண்ணுங்க. ➤Facewash-ஐ அப்ளை செய்து 1 நிமிடத்துக்கு மேல் கழுவாமல் இருந்தால் முகம் ட்ரை ஆகும் ➤முகத்தை அழுத்தி தேய்க்க வேண்டாம். Gentle-ஆக மசாஜ் செய்யுங்கள் போதும் ➤அடிக்கடி Facewash கொண்டு முகத்தை கழுவவேண்டாம். உங்கள் தோலை இது பாதிக்கலாம். SHARE.
News September 18, 2025
₹100 கோடி வசூலித்த ‘மதராஸி’

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் உலகளவில் ₹100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்.5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ முதல் 2 நாளில் ₹50 கோடி வசூலித்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சறுக்கியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’, ‘அமரன்’ வரிசையில் மதராஸியும் ₹100 கோடி வசூலில் இணைந்துள்ளது. நீங்க படம் பார்த்தாச்சா?
News September 18, 2025
பண மழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் 21-ம் தேதி, உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் பெறும் ராசியினர்: *ரிஷபம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும், முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும், வணிகத்தில் லாபம் பெருகும் *சிம்மம்: தொட்டதெல்லாம் வெற்றியாகும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம், வருமானம் பெருகும் *துலாம்: தொடர்ந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும், நிலம் வாங்க வாய்ப்பு, நேரம் சாதகமாகும்.