News February 8, 2025
17 ஆண்டு திருமண வாழ்வை முறிக்கும் ஜெசிகா

ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெசிகா ஆல்பா, தனது 17 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கும் கணவர் கேஷ் வாரனுக்கும் 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். விவாகாரத்துக்கான காரணம் குறித்து இருவரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கவில்லை.
Similar News
News September 8, 2025
நாகர்கோவில்: அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம்

அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.16 அன்று 11. மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
BREAKING: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நாளை(செப்.9) காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. CM ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
24K, 22K, 18K தங்கம்.. என்ன வித்தியாசம் தெரியுமா?

தினசரி நாம் கேள்விப்படும் தங்க நகைகளில் 24K-வில் தொடங்கி, 22K, 18K, 14K, 10K என்ற வெரைட்டிகள் உள்ளன. இவை தங்கத்தின் தூய்மையை குறிக்கிறது. 24K என்பது 99.9% தூய்மையானது, அதே போல 22K என்பது 91.3% தூய்மையானதாகவும் 8.7% செம்பு, வெள்ளி போன்றவை கலக்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன்பாடும் உள்ளது. அவற்றை பற்றி அறிய, மேலே உள்ள படங்களை Swipe செய்து பார்க்கவும். Share it to friends.