News October 27, 2024
JEE Mains: மாற்றுத்திறனாளிகள் இந்த சலுகைகள் பெறலாம் (1/2)

JEE முதன்மைத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தப்பட்ட சலுகை விவரங்களை NTA வெளியிட்டுள்ளது. *மாற்றுத்திறனாளிகள் தங்களது உதவியாளர்களை சுயமாக தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது அதற்கான தேர்வுக் குழுவை அணுக வேண்டும். *தேர்வுக்கு 2 நாள்களுக்கு முன்பு உதவியாளரை தேர்வர்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும். *இனி கூடுதல் நேரம், இழப்பீட்டு நேரம் என மாற்றப்பட வேண்டும்.
Similar News
News January 16, 2026
கிஃப்டாக வரும் புத்தகங்களை ஸ்டாலின் என்ன செய்வார்?

CM மற்றும் DCM ஆகியோருக்கு கிஃப்டாக வரும் அனைத்து புத்தகங்களும் TN-ல் உள்ள நூலகங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க விரும்பும் சில புத்தகங்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் என கூறியவர், ஏதேனும் நூலகத்திற்கு புத்தகங்கள் தேவைப்பட்டால், CM, DCM ஆகியோருக்கு கடிதம் எழுதலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
தென்கொரிய Ex அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தென்கொரிய Ex அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களைத் திரித்து உருவாக்கியது மற்றும் ராணுவச் சட்டத்திற்கு தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற தவறியது ஆகிய குற்றத்திற்காக பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மிக கடுமையான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 16, 2026
தமிழக மக்கள் நாயகன் காலமானார்

ஜல்லிக்கட்டு நாயகனான கருப்பணன் (எ) கீழையூர் டொங்கான் காலமானார். 1965 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவிய காளையரான இவர், ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளார். கபடியிலும் கண்கட்டி வித்தையை காட்டியுள்ளார். இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்திய அவரது இறுதி மூச்சு நின்ற நிலையில், அவருக்கு உறவினர்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


