News February 11, 2025

JEE மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

image

தேசிய தேர்வு முகமை (NTA) JEE Main 2025 முடிவுகளை வெளியிட்டுள்ளது. முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். எனினும், பல விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பிழைகள் இருப்பதாகவும், முடிவுகள் காட்டப்படவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். BE/BTech படிப்புகளில் சேர்வதற்காக கடந்த மாதம் 22 முதல் 29 வரை இத்தேர்வு நடந்தது.

Similar News

News March 6, 2026

PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.

News March 6, 2026

LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

image

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

News March 6, 2026

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

image

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!