News February 11, 2025
JEE தேர்வு முடிவு வெளியீடு

பொறியியல் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் ரிசல்ட்டை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் ரிசல்ட்டை jeemain.nta.nic.in. என்ற வெப்சைட்டில் சென்று தெரிந்து கொள்ளலாம். கடந்த மாதம் 22 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வில் 12.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் 14 பேர் 100 சதவீத மதிப்பெண்களை ஸ்கோர் செய்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
News March 16, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறையாகும். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!


