News April 16, 2025
JEE விடைக்குறிப்புகள்.. NTA விளக்கம்

JEE (முதன்மை) அமர்வு-2-க்கு பதிவேற்றப்பட்ட விடைக்குறிப்புகள் தற்காலிகமானவை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. JEE இறுதி விடைக்குறிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இறுதி விடைக்குறிப்புகள் மட்டுமே மதிப்பெண்களை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. JEE (முதன்மை) அமர்வு-2-க்கான விடைக்குறிப்பில் பிழைகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 14
3. வயது: 30க்குள் (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ. 56,900
5. கல்வித் தகுதி: 10,12th
6. கடைசி தேதி: 29.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 28, 2025
ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி: செங்கோட்டையன்

2026 தேர்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், ஆட்சிப் பீடத்தில் விஜய் அமர்வது உறுதி எனவும் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் சிலர் தவெகவில் இணைய உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.
News November 28, 2025
டிரம்ப் செயலால் 19 நாடுகளுக்கு வந்த புதிய சிக்கல்

வெள்ளை மாளிகை அருகே நடந்த <<18400484>>துப்பாக்கிச்சூட்டை<<>> தொடர்ந்து, ஆப்கானியர்களின் <<18401691>>குடியேற்றத்துக்கு <<>>டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பர்மா, ஈரான், ஹைட்டி, சோமாலியா, சூடான், யேமன், கியூபா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வந்தவர்களின் கிரீன் கார்டுகளை முழுமையாக பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காயமடைந்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார்.


