News October 23, 2024
இபிஎஸ்-க்கு பொறாமை: முதல்வர்

திமுக சிறப்பாக செயல்படுவதால் இபிஎஸ் பொறாமைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜோசியரை போல அவர் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.
Similar News
News January 16, 2026
‘ஆட்டு பொங்கல்’ தெரியுமா?

தமிழக மக்களே! மாட்டு பொங்கல் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் ‘ஆட்டு பொங்கல்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா? நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மாட்டுப் பொங்கலான இன்று ஆடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ‘ஆட்டு பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமின்றி, அவற்றைக் காவல் காக்கும் நாய்களுக்கும் மரியாதை செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. உங்க ஊரில் எப்படி?
News January 16, 2026
காசாவில் அமைதி வாரியம்: டிரம்ப்

போரின் கோரமுகத்தை காசாவும், காசா மக்களும் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர். இதனால், அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், காசாவில் அமைதியை கொண்டுவர வாரியம் அமைக்கப்படும் என்றும், அதன் தலைவராக டிரம்ப் செயல்படுவார் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் உடனே ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
News January 16, 2026
கம்பேக் கொடுத்தாரா ஜீவா? முந்தும் TTT

பொங்கல் ரேஸில் ஜீவாவின் ‘TTT’ முந்துவதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இந்த படத்தின் கதைக்களம், நடிகர்களின் ஆக்டிங், காமெடி, குறைவான ரன் டைம் என அனைத்தும் பிளஸ்ஸாக அமைய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் புக்கிங் தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும் நிலையில், ஜீவாவிற்கு இது சரியான கம்பேக் படம் எனவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். நீங்க பாத்தாச்சா TTT.. எப்படி இருக்கு?


