News April 22, 2025
ஜேடி வான்ஸ் சொன்ன செய்தி.. இந்தியாவிற்கு சாதகம்?

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவை இருநாடுகளும் இறுதி செய்துவிட்டதாக USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய நலன்களுக்காக பிரதமர் மோடியின் அரசாங்கம் கடுமையாக பேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா என்பது தெரியவரும்.
Similar News
News April 23, 2025
விருதுகளை விட இதுதான் முக்கியம்: சாய் பல்லவி

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 23, 2025
10 பேருக்கு தலா ₹70,000.. துபேவின் தாராள மனசு!

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 10 தடகள வீரர்களுக்கு தலா ₹70,000 வழங்குவேன் என ஷிவம் துபே உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வருடாந்தர விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், இந்த சிறிய உதவித்தொகை, தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும், தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு கூடுதல் உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!