News August 3, 2024
சிவகார்த்திகேயன் உடன் மோதும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். முன்னதாக, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 16, 2025
இந்தோனேசியாவை தாக்கிய பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் அபேபுரா நகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 70 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 6.7-ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 62,000 மக்கள் வாழும் இந்த பகுதிக்கு தற்போது வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். சில நாள்கள் முன்பும், ரிக்டர் அளவில் 7.4 நிலநடுக்கம் இந்தோனேசியாவை தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 16, 2025
இந்த வார OTT ரிலீஸ்.. ரெடியா மக்களே!

தீபாவளி & வார விடுமுறையை கொண்டாட, அரை டஜன் படங்கள் OTT-ல் வெளியாகவுள்ளன *தண்டகாரண்யம்(தமிழ்) & மாயபுத்தகம்(தமிழ்)- Simply South *தணல்(தமிழ்)- அமேசான் ப்ரைம் *முதல் பக்கம்(தமிழ்)- ஆஹா *Final Destination(ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் *கிஷ்கிந்தபுரி(தெலுங்கு)- Zee5 *மிராஜ்(மலையாளம்)- Sony Liv *We live in time(ஆங்கிலம்)- Lionsgate play. மேலும், தமிழில் தீபாவளி ட்ரீட்டாக 3 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன.
News October 16, 2025
BREAKING: மகளிர் உரிமை தொகை.. புதிய அறிவிப்பு

சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார். 1.14 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத் தொகை திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், டிச.15-ம் தேதி முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் உதயநிதி அறிவித்துள்ளார்.