News February 24, 2025
அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதா

நடிகையாக தனது கலை வாழ்வை தொடங்கி தமிழக மக்களின் ‘அம்மா’வாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினம் இன்று. அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவர், எம்ஜிஆர் பெற்ற வெற்றிகளையும் தாண்டி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தினார். 6 சட்டமன்ற தேர்தலை அவர் தலைமையில் சந்தித்த அதிமுக, 4 முறை வெற்றிபெற்றது. குறிப்பாக 2011, 2016இல் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது அவரின் தலைமைக்கு கிடைத்த சான்றாகும்.
Similar News
News February 24, 2025
‘மடல்’ டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு

‘மடல்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிசங்கர் ரவீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிலநேரங்களில் சில மனிதர்கள், அன்பிற்கினியாள், போன்ற படங்களில் நடித்த பிரவீன் ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாலசரவணன், விவேக் பிரசன்னா, கிருஷ்ண தயாள் ஆகியோருடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்று நடந்த படத்தின் பூஜையில் நடிகர் மணிகண்டன் கலந்துகொண்டார்.
News February 24, 2025
திரிவேணி சங்கமத்தில் 62 கோடி பேர் புனித நீராடல்

திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
News February 24, 2025
அசாருதீன் சாதனையை முறியடித்த கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (158 கேட்ச்) முதலிடம் பிடித்துள்ளார். பாக்., எதிரான ஆட்டத்தில் 2 கேட்ச் பிடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அசாருதீன் 156 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் 140, டிராவிட் 124, ரெய்னா 102 கேட்சுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.