News May 13, 2024
5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை?

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. உடல் கிடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் கடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 22, 2026
UAE மீது சரமாரியாக தாக்கிய ஈரான் டிரோன்கள்

ஈரான் தற்போது அண்டை நாடுகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகம் பெற்ற $5.2 டிரில்லியன் வெளிநாடு முதலீடுகளில் 27% UAE -ல் இருந்து வந்தது. இதனால் அந்நாட்டை தாக்குவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை மறைமுகமாகச் சேதப்படுத்த ஈரான் தாக்குதல் நடத்துகிறது. உலகளாவிய முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ள துபாயின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே ஈரானின் உத்தியாகும்.
News March 22, 2026
பிரியாணி சாப்பிட்டு வயிறு உப்புசமா இருக்குதா?

ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணியை அளவாகச் சாப்பிடுவது என்பது சற்று கஷ்டம்தான். சிலர் பிரியாணியை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, தீவிர அஜீரண கோளாறுப் பிரச்சனையால் தவிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் அஜீரண கோளாறை சரிசெய்யக்கூடிய இந்த 5 பானங்களை குடித்து பாருங்கள். அவை என்ன என்பதை வலதுபக்கம் Swip செய்து பாருங்கள்.
News March 22, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடை நீக்கம்.. ஆனால் டுவிஸ்ட்

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் வரை உயர்வை குறைக்க ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடையை ஒருமாத காலத்துக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்மூலம் 140 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் ஈரான் விற்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், சர்வதேச சந்தைகளுக்கு விற்பனை செய்ய எண்ணெய் கையிருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.


