News May 19, 2024
தோனி குறித்து உருக்கமாக பதிவிட்ட ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தோனி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், தோல்வி விளிம்பில் சிஎஸ்கே இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன், இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தியதாகவும், ஆனால் அவர் அடித்த கடைசி சிக்சரை பார்த்து ஓய்வு இல்லை என உறுதி செய்ததாகவும், சாம்ராஜ்யங்கள் சரியலாம், சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை என பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 13, 2025
முடிக்கு டை அடிக்கவேண்டாம்; இத பண்ணுங்க போதும்

ஹேர் டைகளால் <<17695742>>கேன்சர் ஏற்படும் அபாயம்<<>> இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கெமிக்கல் நிறைந்த ஹேர் டைக்கு பதிலாக, கோகோ பவுடரை சிலர் பரிந்துரைக்கின்றனர். இதற்கு, கோகோ பவுடரை தேவையான அளவு எடுத்து, அதில் தயிரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, 20 நிமிடங்கள் காயவிட்டு தண்ணீர் கொண்டு அலசுங்கள். அலசும்போது ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை இத Try பண்ணி பாருங்க. SHARE.
News September 13, 2025
லோன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி

ஆகஸ்ட்டில் பணவீக்கம் 2%க்கு மேல் பதிவாகியுள்ளதால், அக்டோபரில் வட்டி குறைப்பிற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என SBI கணித்துள்ளது. GST வரி மாற்றங்களால், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கத்தை 40-45 அடிப்படை புள்ளிகள் வரை குறையலாம். அதேபோல், வரும் காலாண்டிலும் பணவீக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதால் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது. இது லோன் வாங்கியவர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
News September 13, 2025
திருச்சியை திக்குமுக்காடச் செய்த விஜய் PHOTOS

தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே திருச்சியை திணறடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். விமான நிலையத்தில் இருந்து விஜய் வர தாமதமான நிலையில், அவர் முதன்முதலில் பரப்புரையை தொடங்குவதாக இருந்த மரக்கடை பகுதியில் பெருங்கூட்டம் திரண்டது. தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த விஜய், ஆரவாரத்திற்கு இடையே உற்சாகமாக உரையாற்றிய போட்டோஸ் வைரலாகி வருகின்றன. மேலே ஸ்வைப் செய்து அதனை பாருங்கள்.