News March 3, 2025
திமுக கூட்டணியில் கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் மேலும் தீயை பற்ற வைத்துள்ளார். திமுக கூட்டணி உடையும் என அவர் அளித்த பேட்டி, அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்சி வெளியேறும் என ஜெயக்குமார் கூறாத நிலையில், திருமாவளவன் விசிக MLA எண்ணிக்கை குறித்து பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது.
Similar News
News January 31, 2026
நாகை: திருமண தடையை நீக்கும் அற்புத கோவில்!

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
News January 31, 2026
துப்பாக்கிச் சத்தத்தால் அதிரும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் டோல்காமில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூட்டில் நடத்தியுள்ளனர். ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய ‘ஆபரேஷன் த்ராஷி-I’-ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் ராணுவம், போலீஸ் மற்றும் CRPF இணைந்து அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்து, இணைய சேவையையும் தடை செய்துள்ளனர்.
News January 31, 2026
மக்களை சந்திக்கிறார் விஜய்..!

பிப்ரவரி மாதத்தில் தவெக சார்பில் வேலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான உரிய அனுமதியை பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளதாம். காவல்துறையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய் மக்களை சந்திப்பார் என்கின்றனர். ஈரோடு பிரச்சாரத்திற்கு பிறகு சுமார் 2 மாதங்களுக்கு விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


