News February 9, 2025
ஒன்னேகால் நிமிடத்தில் ஓவரை முடித்த ஜட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் 24ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினர். அதனை அவர் வெறும் 73 நொடிகளில் வீசி முடித்தது சாதனை படைத்துள்ளார். சராசரியாக ஒரு ஓவரை வீசுவதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். சில ஸ்பின்னர்கள் 3 நிமிடத்தில் கூட வீசுவர். முன்னதாக, டேரில் டஃபி 1 நிமிடம் 56 நொடிகளில் ஓவர் வீசியதே சாதனையாக இருந்தது.
Similar News
News September 9, 2025
துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், துணை ஜனாதிபதி தேர்தல், லோக்சபா & ராஜ்யசபா உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படும். தேர்தலில் போட்டியிடுபவர் 35 வயதை கடந்தவராகவும் இருக்க வேண்டும். குறைந்தது 20 பரிந்துரையாளர்கள் & 20 ஆதரவாளர்களின் கையொப்பம் & ₹15,000 வைப்பு தொகையை வேட்புமனுவில் வழங்கியிருப்பார். மெஜாரிட்டி பெறுபவர் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் தேர்வாகிறார்.
News September 9, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.9) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று(செப்.8) சவரனுக்கு ₹720 உயர்ந்த நிலையில், இன்றும் ₹720 என தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், ஒரு சவரன் ₹81,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹140-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,40,000-க்கும் விற்பனையாகிறது.
News September 9, 2025
இன்ஸ்டா சிறுவனுக்கு Thug கொடுத்த மாடல் அவந்திகா!

அவந்திகா மோகனின் இந்த ரிப்ளையை பார்த்த 90s-கிட்ஸ்கள், ‘தம்பி போய் படிக்கிற வேலைய பாருப்பா’ என கலாய்த்து வருகின்றனர். மாடலிங் கேர்ளான அவந்திகாவுக்கு 17 வயது சிறுவன் ஒருவன், உங்களை திருமணம் செய்ய விரும்புவதாக இன்ஸ்டாவில் கேட்டுள்ளான். அதற்கு, ‘இப்போது நீ பரீட்சைகளை பற்றித்தான் கவலைப்பட வேண்டும், திருமணத்தை பற்றி அல்ல’ என அறிவுரை வழங்கியுள்ளார் அவந்திகா. நீங்க என்ன நினைக்கிறீங்க?