News September 4, 2025

பாதியில் நின்றுபோன ஜேசன் சஞ்சய் படம்?

image

அப்பா வழியில் நடிகர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய், தாத்தா வழியில் இயக்குநராக களமிறங்கிவிட்டார். லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வந்த அவரின் படம் தற்போது பாதியில் நிற்பதாக தகவல் வெளிவந்துள்ளது. படத்தை ஜேசனே First Copy Basis-ல் தயாரிப்பதாக கூறப்படும் நிலையில், ₹8 கோடி பணம் இல்லாத காரணத்தால், தற்போது படத்தின் சூட்டிங் நின்று விட்டதாம். ராஜா வீட்டு கன்னுக்குட்டிக்கே பணப் பிரச்னையா?

Similar News

News September 5, 2025

BREAKING: பூவை செங்குட்டுவன் காலமானார்

image

ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்(90) காலமானார். வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஏராளமான ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை. RIP

News September 5, 2025

EVM-க்கு பதில் வாக்குச்சீட்டில் தேர்தல்.. கர்நாடகாவில் ட்விஸ்ட்

image

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் EVM-க்கு பதிலாக வாக்குச்சீட்டை பயன்படுத்த கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட திருத்தம் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு சிபாரிசு செய்யப்பட உள்ளது. வாக்கு திருட்டு, பாஜகவிற்கு ஆதரவாக ECI செயல்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கர்நாடகா Cong அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆனால், தோல்வி பயத்தில் இப்படி செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.

News September 5, 2025

ராணி கேத்தரின் காலமானார்

image

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கென்ட் சீமாட்டி என்று அழைக்கப்படும் கேத்தரின் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனும், கென்ட் இளவரசருமான எட்வர்டை மணந்தவர் தான் கேத்தரின். பல அறப்பணிகளை இவர் செய்து வந்தார். RIP!

error: Content is protected !!