News October 4, 2025

ஜப்பானில் முதல்முறையாக பெண் பிரதமர்?

image

தீவிர வலதுசாரி தலைவரான சனே தகைச்சி, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சனே தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று பெருமையை அவர் பெறுவார். ஆளும் LDP கட்சி தலைவருக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 15-ம் தேதி பிரதமரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக ஜப்பான் நாடாளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 4, 2025

கரூர் துயரம்: முடிவை மாற்றினார் இபிஎஸ்

image

கரூர் துயரத்தையொட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் பரப்புரை செய்ய ஐகோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே, நாளை குமாரபாளையம், திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐகோர்ட் தடையை சுட்டிக்காட்டி அவருக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவில் மாற்றம் செய்துள்ள இபிஎஸ், உரிய அனுமதியுடன் அக்.8-ல் அங்கு பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

News October 4, 2025

உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

image

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

சுயமரியாதைக்காரன் என்பதில் மகிழ்ச்சி: CM ஸ்டாலின்

image

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா செங்கல்பட்டில் நடந்து வருகிறது. இதில் பேசிய CM ஸ்டாலின், சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு இம்மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியை தருவதாகவும், கலைஞர், பேராசிரியருக்கு பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி தன்னை வழிநடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், திராவிடர் கழகத்திற்கு எதிராக திமுக தொடங்கப்படவில்லை என்றும் கூறினார்.

error: Content is protected !!