News October 17, 2025

ஜப்பானின் Ex. பிரதமர் முராயமா காலமானார்!

image

ஜப்பானின் Ex. பிரதமர் டோமிச்சி முராயமா(101) உடல்நலக் குறைவால் காலமானார். 2-ம் உலக போரில் ஜப்பான் சரணடைந்த 50-வது ஆண்டு தினத்தில் பேசிய அவர், போரின் போது ஜப்பான், ஆசிய நாடுகளுக்கு பெரிய பாதிப்புகளை உண்டாக்கியதற்கு மிகவும் வருந்துவதாக கூறினார். 1995-ல் பேசிய இவரின் உரை உலகளவில் கவனம் ஈர்த்தது. 1994-96 வரை ஜப்பானின் பிரதமராக இருந்த முராயமாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

போக்சோ வழக்கு: டிஜிபி புதிய உத்தரவு

image

போக்சோ வழக்குகளின் கீழ் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த தேவையில்லை என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால், குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யலாம் என்றும், சாதாரண காயங்களுக்கு அதற்குரிய சோதனை போதும் என்றும் அவர் கூறியுள்ளார். பரிசோதனைகளின் போது குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

தவெகவில் இருந்து புஸ்ஸி ஆனந்த் நீக்கமா?

image

கரூர் துயர சம்பவத்தால் தவெகவிற்கு உள்ளேயே புஸ்ஸி ஆனந்த் அதிருப்தியை அறுவடை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், #KICKOUTNANAND என்ற ஹேஸ்டேக் X தளத்தில் டிரெண்டாகி அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. விஜய் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோஷங்களும் எழத் தொடங்கியுள்ளன. இதனால், புஸ்ஸி ஆனந்த் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

News October 17, 2025

FLASH: ஆப்கன் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.66 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.30 மணி அளவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் குவிந்தனர். இதன் சேத விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கமானது ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

error: Content is protected !!