News January 8, 2025
ஜனவரி 8: வரலாற்றில் இன்று

*1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது *1642 – வானியலாளர் கலீலியோ கலிலி மறைந்தார் *1828 – ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தொடக்கம் *1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார் *1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது *1986 – கன்னட நடிகர் யாஷ் பிறந்தார் *1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்.
Similar News
News September 14, 2025
ஹிட்லர் பொன்மொழிகள்

*எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை. *இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே. *தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். *உனது எதிரியை நீ விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்துகொள்கிறாய். *எவராலும் வெற்றியைத் தாங்கிகொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்கமுடியும்.
News September 14, 2025
LCU-ல் தொடர்ந்து நடிப்பேன்: சாண்டி

LCU-ல் தனது கதாபாத்திரம் தொடரும் என சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் தனது கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இருந்தாலும், ப்ரீக்வெல் படங்களில் தொடர்வேன் என்று அவர் கூறியுள்ளார். தானும், மிஷ்கினும் வேறு LCU படங்களில் நடிப்போம் என்றும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும் எனவும் பேசினார். லியோ கதை சொல்லும் போதே லோகேஷ் இதை உறுதிப்படுத்தியதாகவும் சாண்டி கூறினார்.
News September 14, 2025
இங்கி.ல் சீக்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இங்கிலாந்தில் சீக்கிய பெண் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயதான சீக்கிய பெண்ணை வழிமறித்த இருவர், நீ இந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல, வெளியே செல் எனக் கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வெள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.