News November 20, 2024
Janmath: மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லை
பெரும்பாலான கருத்து கணிப்பு நிறுவனங்கள் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், ஜன்மத் நிறுவனம் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணிக்கு 130 முதல் 145 வரை தொகுதிகளும், காங். கூட்டணிக்கு 125 முதல் 140 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகள்.
Similar News
News November 20, 2024
எந்த நேரத்திலும் அணுகுண்டு.. அச்சத்தில் உக்ரைன் மக்கள்
நெடுந்தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்ததை அடுத்து, ரஷ்ய படைகளுக்கு அணுஆயுத தாக்குதல் நடத்துவது தொடர்பான அதிகாரத்தை புதின் அளித்துள்ளார். 2ஆம் உலகப் பாேரின்போது அணுகுண்டு வீசப்பட்டதால் ஜப்பான் பேரழிவை சந்தித்தது. அதுபோல ரஷ்யா அணுகுண்டு வீசும்பட்சத்தில் உக்ரைனில் பேரழிவும், லட்சக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்படும். இதனால் உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
News November 20, 2024
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: இனி பெண்களுக்கு முன்னுரிமை
கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் 2ஆம் பகுதியில் 100% பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 8 ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் பெண்கள் பெயரில் அல்லது பெண், ஆண் கூட்டுப் பெயரில் மட்டுமே வீட்டின் உரிமை பதிவிட வேண்டும். இனி ஆண் பெயரில் தனித்து உரிமை பதிவிடக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
News November 20, 2024
கம்பீர் நீண்ட காலம் கோச்சாக இருக்கமாட்டார்: சைமன் டவுல்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். “கிரேக் சேப்பலை விட குறைவான காலமே பயிற்சியாளராக இருப்பார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட BGT தொடரில் நல்ல முடிவுகள் வந்தால் பரவாயில்லை. இந்தியா 1-4 அல்லது 0-5 என தோல்வியடைந்தால் அவர் பயிற்சியாளராக தொடர்வது சந்தேகமே” என்றார்.