News January 2, 2025
ஜன.2: வரலாற்றில் இன்று

1757 – கொல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
1954 – பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
1959 – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் பிறந்தநாள்.
1988 – கடத்தல் மன்னன் வரதராஜன் முதலியார் காலமானார்.
Similar News
News December 24, 2025
தேர்தலில் ஒதுங்கியிருக்க மாட்டேன்: சசிகலா

கடந்த காலங்களில் சிலர் செய்த தவறின் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக நாள்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கியிருக்க மாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிச்சயம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் வரும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
News December 24, 2025
லாவோட்சு பொன்மொழிகள்

*நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்.
*மற்றவர்களை அடக்கி ஆளுதல் வலிமை, உங்களை அடக்கி ஆளுதலே உண்மையான சக்தி.
* கடினமான விஷயங்களை, அவை எளிதானதாக இருக்கும்போது செய்யுங்கள். மிகப்பெரிய விஷயங்களை, அவை சிறியதாக இருக்கும்போது செய்யுங்கள்.
*ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றன.
News December 24, 2025
விஜய் ஹசாரே டிராபியில் ஜடேஜா

ரோஹித், கோலி வரிசையில் ஜடேஜாவும் உள்ளூர் போட்டியில் விளையாடவுள்ளார். இதனை, சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் ஜன.6, 8 ஆகிய தேதியில் நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்பார். NZ-க்கு எதிரான ODI தொடருக்கு முன்னதாக உள்ளூர் போட்டியில் ஜடேஜா பங்கேற்பது, அவரது ஃபார்மை மேலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.


