News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News November 17, 2025
Delhi Blast: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு

டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஏற்கெனவே 13 பேர் உயிரிழந்திருந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இனிமேல் கிடைக்காது

தகுதிவாய்ந்த மகளிராக இருந்தாலும் இனி மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட, செய்யப்படாதவர்களின் விவரங்களை டிசம்பர் முதல் வாரத்தில் அரசு தெரிவிக்க உள்ளது. டிச.15-ல் புதியவர்களுக்கும் ₹1,000 டெபாசிட் செய்யப்படும். விண்ணப்பிக்காதவர்கள் அடுத்த அறிவிப்பு வரை காத்திருக்கவும்.