News December 6, 2024
பாதியில் நிற்கும் ஜல் ஜீவன் திட்டம்

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்ட இலக்கை அடைய மத்திய அரசிடம் ₹1,700 கோடி நிதியை எதிர்பார்த்து TN குடிநீர் வாரியம் காத்திருக்கிறது. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ₹4,900 கோடி நிதி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், ₹1,700 கோடி நிலுவையில் இருப்பதால் மாநில அரசுக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
சிவகங்கை சித்த மருத்துவ பிரிவில் வேலை ரெடி! கலெக்டர் அறிவிப்பு

தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 15.12.2025 முதல் 29.12.2025 வரை வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விரும்புவோர் <
News December 12, 2025
எடையை குறைக்க தினமும் இத சாப்பிடுங்க போதும்!

உடல் எடையை குறைப்பதே, தற்போது பலருக்கும் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். *இதில் உள்ள வைட்டமின் சி மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது *நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துகிறது *கல்லீரல், கணையம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது *வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது *செரிமானத்தை சீராக்குகிறது.
News December 12, 2025
கேள்விகளுக்கு பதில் எங்கே? சு.வெங்கடேசன்

மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு, மத்திய அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என MP சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும், மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை’ என்பது போல, PM E-Seva குளிரூடப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதில் கூறுவதாக விமர்சித்துள்ளார்.


