News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News March 26, 2025
முன்னாள் MLA மறைவு: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் MLA கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 1977இல் ஆலங்குளம், 1980இல் பாளையங்கோட்டை, 2006இல் தென்காசி தொகுதியில் இருந்து MLA-ஆக தேர்வாகி மக்களுக்காக உழைத்தவர். நீண்டகாலம் சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
News March 26, 2025
பிரேசிலை புரட்டி எடுத்த அர்ஜென்டினா.. 2026 WC தகுதி

2026 உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, பிரேசிலை எதிர்கொண்டது. இதில் 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அர்ஜென்டினா அடித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய அந்த அணி 4 கோல்களை அடித்து பிரேசிலை நிலைகுலைய வைத்தது. பதிலுக்கு ஒரு கோல் மட்டுமே பிரேசிலால் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 4 – 1 என்ற நிலையில் வெற்றி பெற்று அர்ஜென்டினா 2026 ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.
News March 26, 2025
இல்லவே இல்லை; டென்ஷனான இபிஎஸ்!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இபிஎஸ் சற்று பதற்றமானார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள் ஊடகங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக, இப்படி கேட்பதா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணி மாறும் எனவும், தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விளக்கமளித்தார்.