News April 5, 2025

பந்துகளை பறக்க விடும் ஜெய்ஸ்வால்

image

ராஜஸ்தான் – பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அதிரடியாக அரை சதம் கடந்துள்ளார். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ராஜஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தார். இதனையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Similar News

News September 1, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகல்?

image

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே EPS மீது அதிருப்தியில் இருந்த அவரை, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அவர் தனது முடிவு குறித்து செப்.5-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சமாதானப் புறா பறக்குமா?

News September 1, 2025

UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

image

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction பெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1)வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2)நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3)கடைகளுக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் காசு வைத்து கொள்ளலாம். 4)டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.

News September 1, 2025

Parenting: டிகிரி மட்டும் போதாது.. இதையும் படிக்க வையுங்க..

image

முன்பெல்லாம் டிகிரி முடித்தாலே வேலை என்ற காலகட்டம் மாறி, தற்போது வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளை எதை படிக்க வைப்பது என நீங்கள் குழம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் டிகிரி முடிப்பதோடு, AI சார்த்த படிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், Data Science, அடிப்படை கோடிங், Interior Design, சட்டம் கற்பது அவசியம் என கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!