News September 23, 2025
US அமைச்சருடன் ஜெய்சங்கர் நடத்திய முக்கிய சந்திப்பு

50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு உள்ளிட்டவைக்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். ஐநா கூட்டத்திற்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் இருதரப்பு உறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசித்ததாக ஜெய்சங்கர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நிச்சயம் என 50% வரி, விசா கட்டணம் குறித்தும் பேசப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News September 23, 2025
வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள்?

’வீட்டுல சும்மாதான இருக்க, இத செஞ்சிடு’ – இல்லத்தரசிகளிடம் நாம் சர்வசாதாரணமாக சொல்லும் விஷயம் இது. நாம் சொல்வதை போல அவர்கள் ஒருநாள் சும்மா இருந்தா என்னாகும்? பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளை முக்கியமானதாகவே நாம் கருதுவதில்லை. வீட்டிலுள்ள பெண்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை மேலே உள்ள படம் உணர்த்துகிறது. பெண்களின் உழைப்பை பாராட்ட ஒரு லைக் போடலாமே. கருத்தையும் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 23, 2025
மீண்டும் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி தயார்

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களும் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. இதை தமிழில் கமல்‘பாபநாசம். என்று ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் நிலையில் கொச்சியில் ‘த்ரிஷ்யம் 3’ நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜார்ஜ் குட்டி குடும்பத்தை காப்பாற்றும் அடுத்த அத்தியாயத்தை விரைவில் திரையில் காணலாம்.
News September 23, 2025
வரலாற்றில் இன்று

1799 – இலங்கையில் அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது
1951 – நடிகர் பி. யு. சின்னப்பாவின் நினைவு தினம்
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனில் மோதியது
1985 – கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு பிறந்த தினம்
1996 – நடிகை சில்க் ஸ்மிதா மறைந்த தினம்