News August 5, 2024
பிரதமர் மோடியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

பிரதமர் மோடியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் கலவரமான சூழலில், ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், அண்டை நாட்டு நிலவரம், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 14, 2026
வாழ்க்கையை மாற்றும் தினசரி பழக்கங்கள்

அன்றாடம் நாம் கடைபிடிக்கும் சில பழக்கங்கள் நமது உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில பழக்கங்களை தினமும் தொடர்ந்து கடைபிடித்தால், நமது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மேம்படும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 14, 2026
பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே பள்ளிகளுக்கு இன்று (ஜன.14) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரிகளுக்கும் 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். எனவே, வெளியூரில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லத் தயாராகிவிட்டனர்.
News January 14, 2026
சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு ரெடியான திமுக

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வரும் 19-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்.4, 5-ம் தேதிகளில் அண்ணா அறிவாலயத்தில் துறை சார்ந்த குழுக்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களின் குரலாக தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்றும் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


