News April 24, 2024
மேற்கத்திய ஊடகங்களை விளாசிய ஜெய்சங்கர்

மேற்கத்திய ஊடகங்கள் தகவல் தெரியாமல் அல்ல, தாங்களும் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதுவதால், நமது ஜனநாயகத்தை விமர்சித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேற்கத்திய ஊடகங்கள் நமது நாட்டின் தேர்தல் முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையம், காலநிலை என அனைத்தையும் பற்றி கேள்வி கேட்பார்கள் எனவும் சாடினார்.
Similar News
News January 12, 2026
முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மனைவி மறைவுக்கு CM மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வத்சலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், தொலைபேசி மூலம் அழகிரியை தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியுள்ளார். இதற்கிடையில், திமுக நிர்வாகிகள், விசிக ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
News January 12, 2026
பொங்கலுக்கு அடுத்த ஜாக்பாட்.. பெண்களுக்கு HAPPY NEWS

பொங்கலுக்குள் பெண்களுக்கு அடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாக இருப்பதாக <<18826786>>ஐ.பெரியசாமி<<>> நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால், நாளை அல்லது நாளை மறுநாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 12, 2026
பஸ்ஸில் அதிக கட்டணமா? இங்கு புகார் செய்யலாம்!

பொங்கலையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் போன் வாயிலாகவோ, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் ஆகவோ புகார் அளிக்கலாம் என TN அரசு அறிவித்துள்ளது. மேலும், அதிகம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.


