News May 10, 2024
சிறைவாசிகள் 87.69% தேர்ச்சி

நடப்பாண்டில் 260 சிறைவாசிகள் 10ஆம் பொதுத் தேர்வெழுதிய நிலையில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.69%ஆக உள்ளது. இதுவே கடந்தாண்டு 264 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், 112 பேர் (42.42%) தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில், கடந்தாண்டை காட்டிலும் சிறைவாசிகள் தேர்ச்சி சதவீதம் 45.27% அதிகரித்துள்ளது.
Similar News
News September 23, 2025
கனிமொழிக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்

அமித்ஷா வீட்டில்தான் அதிமுக அலுவலகம் அமைத்துள்ளது என கனிமொழி கூறியதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக அலுவலகம் சென்னையில் தான் அமைந்துள்ளது எனவும், வந்து பாருங்கள் எனவும் கனிமொழிக்கு அவர் அழைப்புவிடுத்தார். மேலும், அதிமுக அலுவலகத்தை திமுக ஆள் வைத்து தகர்க்க பார்த்ததாக குற்றம்சாட்டிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என கூறினார்.
News September 23, 2025
அஸ்வினை எடுக்க போட்டி போடும் ஆஸி., அணிகள்

ஆஸ்திரேலியாவின் IPL-ஆன Big Bash League தொடரில் அஸ்வினை எடுக்க, பல்வேறு அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே, UAE-ல் டிச.2-ம் தேதி தொடங்க உள்ள ILT20 தொடருக்கான ஏலத்திற்கு அவர் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், டிச.14-ம் தேதி தொடங்க உள்ள Big Bash League-ல் அவருக்கான மவுசு அதிகரித்துள்ளதால், 2 தொடர்களிலும் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 23, 2025
தவெக தனித்து ஆட்சி அமைக்கும்: அருண்ராஜ்

தவெக 30% வாக்கு வங்கியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு வருவது பணம் கொடுப்பதால் வரும் கூட்டம். ஆனால், விஜய்க்கு வருவது தன்னெழுச்சியான கூட்டம் எனக் கூறிய அவர், தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சாதகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.