News July 24, 2024
ஜாமின் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு சாதகம்?

செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் ட்ரைவில் கூடுதல் ஆவணம் வந்தது எப்படி? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய ஆவணம் வந்தது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய நீதிபதிகள், தாங்கள் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினர். நீதிபதிகளின் கிடுக்குப்பிடி விசாரணையை எதிர்கொள்ள ED திணறிய நிலையில், செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 28, 2026
மீன்பிடி தடைக்கால நிதி ₹12,000 உயர்த்தப்படும்: டிடிவி

தமிழகத்தின் நிர்வாக வசதிகளுக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என TTV வாக்குறுதி அளித்துள்ளார். *மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ₹8000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும் * மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ₹2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் * சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். TNElection2026
News March 28, 2026
சீமானுக்கு சவாலாக மாறும் தேர்போகி பாண்டி

காரைக்குடியில் சீமானுக்கு எதிராக அமமுகவின் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். 2021-ல் காரைக்குடியில் அமமுக சார்பில் தனித்து போட்டியிட்ட தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளை பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் சா.மாங்குடி 75,954, அதிமுக கூட்டணி வேட்பாளர் எச்.ராஜா 54,365 வாங்கினர். தற்போது அதிமுக – அமமுக கூட்டணி அமைத்துள்ளதால், அத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல் வெளியானது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $110 (இந்திய மதிப்பில் ₹10,435) உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவிலும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த வாரமும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் போர் நிறுத்த நீட்டிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.


