News May 15, 2024

ஜெய் ஷாவுக்கு எல்லா தகுதியும் உள்ளது: அனுராக் தாக்கூர்

image

ஜெய் ஷாவுக்கு தகுதி இருப்பதால் தான், பிசிசிஐ செயலாளராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரபலமான ஒருவரின் மகனாக பிறப்பது குற்றம் அல்ல என்று கூறிய அவர், ஜெய் ஷா பதவியேற்ற பிறகு, கிரிக்கெட்டுக்காக பல நல்ல விஷயங்களை செய்திருப்பதாக பாராட்டினார். ஜெய் ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக தற்போது விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 10, 2026

கனிமொழிக்கு அண்ணனை பார்த்து பயமா? குஷ்பு

image

TN-ல் சட்​டம்-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். பெண்​களுக்கு எதி​ரான வன்​முறை​கள் குறித்து கனி​மொழி ஏன் மவுனம் காக்​கி​றார்; தனது அண்ணனிடம் கேள்வி கேட்க பயப்படுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவினர் பெண்​களை வெறும் பாலியல் பொருளாக பார்ப்​ப​தால் தான், மாநிலத்​தில் பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​கள் பெருகி வரு​வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News April 10, 2026

வங்கிக் கணக்கில் ₹6,000.. காலையிலேயே HAPPY NEWS

image

தமிழக தேர்தலை முன்னிட்டு, காங்., தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக PM Kisan திட்டத்தின் கீழ், விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, நிலமுள்ள விவசாயிகளுக்கு, குறிப்பிட்ட விதிகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2026

கட்சி மாறுகிறாரா விஜயகாந்தின் வலதுகரம்?

image

திமுக கூட்டணியில் இணைந்து 10 தொகுதிகளை பெற்றுள்ள பிரேமலதா, விஜயகாந்தின் வலதுகரமாக வலம் வந்த EX MLA பார்த்தசாரதிக்கு சீட் கொடுக்கவில்லை. விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட நிர்வாகியாக இருந்த பார்த்தசாரதி, கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியவர். ஆனால், சீட் மறுக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக அடிருப்தியில் இருக்கும் அவர், கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!