News August 11, 2024
இனி பள்ளிகளில் ‘ஜெய் ஹிந்த்’ சொல்ல வேண்டும்

ஹரியானாவில் உள்ள அரசு பள்ளிகளில் இனி ‘குட் மார்னிங்’ என சொல்வதற்குப் பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ சொல்ல வேண்டும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஹரியானா பள்ளி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்திலிருந்து இந்த முறை கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.
News March 4, 2026
முதல் அரையிறுதி : NZ Vs SA பலப்பரீட்சை

டி20 WC முதலாவது அரையிறுதி போட்டியில், இன்று தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து, SA-வுக்கு கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு? உங்கள் கணிப்பு
News March 4, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 4, மாசி 20 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


