News May 5, 2024

ஆந்திராவை கொள்ளையடித்து விட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

image

ஆந்திராவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொள்ளையடித்து விட்டதாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். தனது சகோதரி ஷர்மிளாவை தனக்கு எதிராக சந்திரபாபு நாயுடு திருப்பி விட்டிருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட, தன் மீது அவர் குற்றம்சுமத்துவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News August 14, 2025

தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

image

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும்.
✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள்
➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள்.
➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

News August 14, 2025

நான் உறங்க போவதில்லை: CM ஸ்டாலின்

image

திமுக மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால், தானும் உறங்கப் போவதில்லை, உங்களையும் உறங்கவிட போவதில்லை என ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் செல்​வாக்கு அதிகரித்துள்ளதாகவும், வரும் நாள்​களில் திமுக அரசு மேற்​கொள்​ளும் நடவடிக்​கைகளால், தமிழகத்​தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக உயரும் என்றும் கூறினார்.

News August 14, 2025

தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை மீது வழக்கு

image

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய தமிழிசை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் தடையை மீறி போராட்டக்களத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். போலீசார் தனது வீட்டை சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும் என பேட்டியில் கேட்டிருந்தார். இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக கூறி தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!