News August 27, 2024
துலீப் கோப்பை தொடரிலிருந்து ஜடேஜா விலகல்

துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றிலிருந்து ஜடேஜா மற்றும் சிராஜ் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சிராஜ் விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக நவ்தீப் சைனி விளையாட உள்ளார். ஜடேஜா விலகியது குறித்த காரணம் வெளியாகவில்லை. முன்னதாக இத்தொடரில் விளையாடுவதில் இருந்து கோலி, ரோஹித், அஷ்வின் மற்றும் பும்ராவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் வரும் செப்.5 தேதி தொடங்கவுள்ளது.
Similar News
News July 6, 2025
2026 சட்டமன்றத் தேர்தலில் பின்வாங்குகிறதா பாஜக?

நமது இலக்கு 2026 தேர்தல் அல்ல; 2029 லோக்சபா தேர்தல் என நயினார் கூறியுள்ளார். சென்னையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலுக்கான வியூகத்தை அமித்ஷா பார்த்து கொள்வார் எனவும் 2029 தேர்தலில் அதிக MPக்களை பார்லிமென்ட்டுக்கு அனுப்புவதே நமது இலக்கு என்றார். நயினாரின் இந்த பேச்சு, அதிமுகவின் நிபந்தனைகளுக்கு பாஜக பச்சைக்கொடி கட்டுவதையே உணர்த்துவதாக பேசப்படுகிறது.
News July 6, 2025
தமிழக அரசில் 2,299 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகியுள்ளது. தகுதி: 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.4. திறனறிவு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை நேரடியாக பெறலாம். Share it!
News July 6, 2025
முடிவுக்கு வருகிறதா பாமக பிரச்னை?

ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஜூலை 8-ல் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதனால், தந்தை – மகன் இடையே இருக்கும் பிரச்னை முடிவுக்கு வரவிருப்பதாக பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.