News October 4, 2025
சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா

வெ.இண்டீஸுக்கு எதிரான தொடரில் சதத்துடன், 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் டெஸ்டில் அதிக ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்கள் பட்டியலில் ஜடேஜா(11) 2-வது இடத்திற்கு முன்னேறினார். 14 ஆட்ட நாயகன் விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்டில் ஜடேஜா 3,990 ரன்களை, 334 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
Similar News
News October 4, 2025
ரோபோ சங்கரின் மகள் உருக்கம்

ரோபோ சங்கரின் இறப்புக்கு பிறகு முதல்முறையாக மீடியாவை சந்தித்த அவரது மகள் இந்திரஜா உருக்கமாக பேசியுள்ளார். ‘மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. அப்பாவின் பாதையில் தொடர்வோம். அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்தவே அவரது இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடினார். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அம்மாவை விமர்சித்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
News October 4, 2025
சோதனையிலும் சாதனை படைத்த கே.எல்.ராகுல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் கே.எல்.ராகுல் அவுட் ஆனார். இதன்மூலம், ஒரே ஆண்டில் சதம் அடித்ததும் இருமுறை அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் அவர் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் தோன்றிய 1877 முதல், இதுவரை யாரும் ஒரே ஆண்டில் இருமுறை 100 ரன்னில் அவுட் ஆனது இல்லை.
News October 4, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் ரேஷன் கார்டில் சரியான முகவரி இருக்கிறதா என சரிபார்ப்பது நல்லது. அதில், முரண்பாடு இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது சிக்கல் வரும். குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் விசாரணையில் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. SHARE