News March 10, 2025
Retirement பஞ்சாயத்த முடிச்சிவிட்ட ஜடேஜா…!

CT FINAL நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இந்திய வீரர் ஜடேஜா ODI போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக செய்திகள் உலா வந்தன. தனது 10வது ஓவரை அவர் வீசி முடிந்த பிறகு, சக வீரர் கோலி கட்டியணைத்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் யூகங்களை பதிவிட்டனர். இந்நிலையில், ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா, ‘தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம், நன்றி’ என தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 10, 2025
இப்படியுமா சாவு வரும்!

ஜார்கண்ட்: பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகளை வெளியே வைத்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பயந்து போய் அனைவரும் கடைக்கு உள்ளே சென்று சாத்திக் கொண்டதாகவும் FIRஇல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைக்குள்ளே புகை சூழ்ந்ததால், மூச்சடைத்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வெளியே ஓடியிருந்தால் மரணம் ஏற்பட்டிருக்காது என்று போலீசார் கூறுகின்றனர்.
News March 10, 2025
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு .. பாமக

பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை *அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு * தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். திருநங்கையருக்கு 1% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2025
உலகின் இரண்டாவது பெரிய முட்டை இதுதான்

அண்டார்டிகாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை எந்த விலங்கினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. கோழி முட்டை போல வலுவான ஓடு இல்லாமல் இந்த முட்டையின் ஓடு மிருதுவானதாக இருக்கிறது. ஆகையால், இது கடல் பிராணியான மொசாசர்ஸ் விலங்கினுடையதாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானைப் பறவையின் முட்டைக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய முட்டை என்றும் கூறப்பட்டுள்ளது.