News April 22, 2025
மஸ்க் தாயாருடன் ஜாக்குலின்

எலான் மஸ்கின் தாயார் மே மஸ்க்குடன் இணைந்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மே தான் எழுதிய ‘A Woman Makes A Plan’ புத்தகத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக மும்பையில் உள்ளார். மேயின் புத்தகம், பெண்களுக்கான அடையாள சின்னம் என ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தாயார் இறந்த பின்பு அவர் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News April 22, 2025
ஐபிஎல் தொடரை ஆளும் தமிழக வீரர்..!

குஜராத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், இந்த ஐபிஎல் சீசனில் முதல் ஆளாக 400 ரன்களை கடந்து ஆரஞ்ச் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய அவர், 5 போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார். மொத்தமாக இந்த சீசனில் 42 பவுண்டரிகள், 15 சிக்சர் உள்பட 417 ரன்களை அவர் குவித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்ஷன் இந்திய அணியில் இடம்பெறுவாரா?
News April 22, 2025
ஹிந்தி திணிப்பு.. மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கேள்வி

மகாராஷ்டிரா ஹிந்தி திணிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதனை திரும்பப் பெற்றது. இதனை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பாஜக ஆளும் மாநிலத்திலேயே ஹிந்தி கட்டாயமில்லை எனக் கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!