News August 28, 2025
ஸ்பைடர் மேனுக்கு பயிற்சி கொடுக்கும் ஜாக்கி சான்

ஸ்டண்ட் காட்சியில் எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் அதில் துணிந்தும் ரசிக்கும்படியும் நடிக்க கூடியவர் ஜாக்கி சான். வயது காரணமாக நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர் தற்போது ‘Spider-Man : Brand New Day’ படத்தில் பணியாற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஜாக்கி சானும் அவருடைய ஸ்டண்ட் குழுவும் ஸ்பைடர் மேன் படத்தில் முக்கிய சண்டை காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஸ்பைடர் மேன் குங்ஃபூ சண்டையிட்டால் எப்படி இருக்கும் ?
Similar News
News August 29, 2025
GMAIL பயனர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த கூகுள்

வங்கி கணக்கு தொடங்கி நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் GMAIL இணைந்துள்ளது. இந்நிலையில் 2.5 பில்லியன் GMAIL பயனர்கள் இப்போது ஆபத்தில் உள்ளதாக கூகுள் ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளது. GMAIL மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மாற்றுவதோடு, PASSKEY பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
News August 29, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 29)

1905 – இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினம்
1943 – தமிழ் சினிமா பிரபலம் விஜயகுமார் பிறந்த நாள்
1958 – பாப் இசை பிரபலம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்
1959 – தெலுங்கு திரை நட்சத்திரம் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த தினம்
1977 – நடிகர் விஷால் பிறந்த நாள்
News August 29, 2025
மதராஸி படத்திற்கு U/A சான்றிதழ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி. செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. சென்சார் போர்டு சான்றிதழில் படத்தின் ரன் டைம் 167.33 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமரன் பெற்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளியாகும் இப்படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.