News May 7, 2025
ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

90’s கிட்ஸ்களின் ஃபேவரெட் ஹீரோவாக திகழும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலையுலகில் அவரது பங்களிப்பை பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஜாக்கி சான் நடிப்பில் கடைசியாக 2023-ல் ‘ரைட் ஆன்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. உங்களுக்கு பிடித்த ஜாக்கி சான் படம் எது?
Similar News
News October 27, 2025
அதிமுகவிடம் 100 தொகுதிகள் கேட்கும் விஜய்?

அதிமுக கூட்டணியில் இணைவதற்கு, விஜய் 100 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக EPS மகன் மிதுன், விஜய்யை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியதாகவும், அப்போது பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இணைய அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 40 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதை விஜய் ஏற்கவில்லை என்று தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News October 27, 2025
இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறையாகும். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். மொன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையின் ஏனாம் மாவட்டத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
காலை குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்

காலையில் உங்கள் குழந்தைகளை சில நிமிடங்கள், அவர்களது கை, கால்களை நீட்டி உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். இதற்கு எளிய யோகா ஆசனங்கள் உதவும். அவை என்னென்ன ஆசனங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, வேறு ஏதேனும் ஆசனம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.


