News April 27, 2025
கோடையில் உடலுக்கு நலம் தரும் பலாப்பழம்!

*பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, A, B, C வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. *இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது. *குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. *ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் குளிர்ச்சியை அதிகரிக்கிறது.
Similar News
News December 16, 2025
புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
விஜய் உடன் இணையும் அடுத்த அதிமுக தலைவர் இவரா?

JCD பிரபாகரனை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தார். தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதிமுகவின் முக்கிய முகமான EX MLA JCD பிரபாகர் தற்போது OPS அணியில் உள்ளார்.
News December 16, 2025
இந்தியா-ஜோர்டன் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள்

அரசு முறை பயணமாக PM மோடி, ஜோர்டன் சென்றிருந்த நிலையில், இருநாடுகள் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நீர் மேலாண்மை, டிஜிட்டல் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஒத்துழைப்பு, 2025-2029 வரை இருநாடுகள் இடையே கலாசார பரிமாற்ற நிகழ்வு, UNESCO அங்கீகாரம் உடைய எல்லோரா, பெட்ரா இடையே இரட்டை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இது IND-JOR உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


