News December 5, 2024
ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை…!!

அம்மா என்ற அதிமுகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகியும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக நிற்கவைக்கிறது. மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் என அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவர் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: தப்பியோடிய கைதியை பிடிக்க 3 தனிப்படை

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து செல்லும் பொழுது வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இதையடுத்து வாஞ்சிநாதனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
இவரை ரொம்ப மிஸ் பண்றோம்: CM ஸ்டாலின்

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற PM-ஐ மிஸ் செய்கிறோம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். வி.பி.சிங் தன்மீது காட்டிய அன்பை நினைவுகூர்ந்த CM, சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக வி.பி.சிங் விளங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
News November 27, 2025
கம்பீர் நீக்கப்படுகிறாரா? BIG REVEAL..

தெ.ஆ., அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் கோச் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் அதனை பிசிசிஐ தற்போது மறுத்துள்ளது. கம்பீரை நீக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும், 2027 WC வரை அவரே கோச்சாக தொடர்வார் எனவும் BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியில் கம்பீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


