News January 22, 2025

இதுவரைக்கும் 2 விஷயத்துக்குதான் பயந்தேன்

image

தனது சினிமா கெரியரில் 2 விஷயங்களுக்கு மட்டுமே பயப்பட்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல் நாள் படப்பிடிப்பின்போதும், அப்படத்தின் ரிலீஸின்போதும் பயந்ததாகக் கூறினார். 25 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பது சாதாரண காரியம் அல்ல எனக் கூறிய மாதவன், மக்களின் ஊக்கம்தான் தன்னை தொடர்ந்து பயணிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News

News October 27, 2025

ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

image

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

News October 27, 2025

உலகிலேயே விலை உயர்ந்த உணவுகள்!

image

ஹோட்டலுக்கு செல்லும் போது உணவின் விலை சற்று அதிகமாக இருந்தால், மீண்டும் அங்கு செல்வதற்கு யோசிப்போம். ஆனால், மேலே உள்ள உணவுகளின் விலையை பார்த்தால், இவ்வளவு காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழும். புகைப்படங்களை SWIPE செய்து பார்ப்பதுடன், நீங்கள் சாப்பிட்ட விலை உயர்ந்த உணவின் பெயரை கமெண்ட் பண்ணுங்க..

error: Content is protected !!