News April 1, 2025
விண்வெளியில் இருப்பது எப்பவும் பிடிக்கும்: சுனிதா

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி 12 நாள்கள் கழித்து சுனிதா, பட்ச் வில்மோர், நிக் ஹேக் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுனிதா பேசும்போது, விண்வெளியில் நேரத்தை செலவிடுவது தனக்கு எப்போதும் பிடிக்கும் எனவும், அங்கு நிறைய ஆராய்ச்சிகளை செய்ததாகவும் கூறினார். மேலும், தங்களை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு கொண்டுவந்த டிரம்ப், மஸ்கிற்கு நன்றியுள்ளவராக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 2, 2025
கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவு விவாகாரம் குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் – இபிஎஸ் இடையே காரசார விவாதமும் நடைபெற்றது.
News April 2, 2025
ஒரு முத்தத்திற்கு ₹50 ஆயிரமா..? டீச்சரின் நூதன மோசடி!

பெங்களூருவில் kindergarden ஸ்கூல் நடத்தும் ஸ்ரீதேவி, ராகேஷ் என்பவருடன் நெருங்கி பழகி முதலில் ₹2 லட்சம் வாங்குகிறார். பிறகு, ₹50 ஆயிரம் வேண்டும் என டிமாண்ட் செய்ய, அதற்கு ஒரு முத்தத்தை கொடுத்து மயக்கி இருக்கிறார். நிலைமையை உணர்ந்த ராகேஷ் விலகி செல்ல, நண்பர்களுடன் சேர்ந்து, ₹20 லட்சம் வேண்டும் என ஸ்ரீதேவி மிரட்டுகிறார். விஷயம் போலீசுக்கு வர, ஸ்ரீதேவியும் அவரது 2 நண்பர்களும் கைதாகி இருக்கின்றனர்.
News April 2, 2025
தேர்தல் நேரத்தில் திமுக கபட நாடகம்: அண்ணாமலை

சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ள நிலையில் இன்று கச்சத்தீவை வைத்து முதலமைச்சர் நாடகமாடி வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவரின் x பதிவில் இலங்கை அரசால் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் துன்புறக் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் CM கபட நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.